'தென்னிந்திய மாநிலங்களில் கடுமையான வறட்சி'

கடந்த 115 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்னிந்திய மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், கடுமையான வறட்சி நிலையிலும் பிரதமர் மோடி மௌனமாக உள்ளார் என்று குற்றம்சாட்டினார்.

மேலும், உள்ளூர் மக்களின் தேவைகள் பூர்த்தியாகாத நிலையில் கூட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். முன்னதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!