Published:Updated:

நட்டாவுடன், தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!

Vikatan Correspondent
நட்டாவுடன், தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!
நட்டாவுடன், தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், அன்பழகன் ஆகியோர் டெல்லிக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் அவர்கள் தற்போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டாவைச் சந்தித்துள்ளனர். அவர்களுடன், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனும் நட்டாவை சந்தித்தார். அப்போது அவர்கள், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைத்தனர்.

நட்டாவுடன், தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!

இதையடுத்து விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கள் கூறுகையில், 'நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை விளக்கினோம். இதில் தமிழகத்தின் நிலையை முழுமையாக எடுத்துரைத்துள்ளோம். தமிழகத்தின் கோரிக்கையை பரிசீலிப்பதாக நட்டா கூறினார். அதேபோல், தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்' என்றும் அவர் உறுதியளித்துள்ளார்' என்றார்.