Published:Updated:

காஷ்மீரில் போலீஸ் வீட்டுக்குள் நுழைந்த தீவிரவாதிகள்!

Vikatan Correspondent
காஷ்மீரில் போலீஸ் வீட்டுக்குள் நுழைந்த தீவிரவாதிகள்!
காஷ்மீரில் போலீஸ் வீட்டுக்குள் நுழைந்த தீவிரவாதிகள்!
காஷ்மீரில் போலீஸ் வீட்டுக்குள் நுழைந்த தீவிரவாதிகள்!

ஜம்மு- காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயரதிகாரி ஒருவர் வீட்டுக்குள் தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த அவர்கள், வீட்டில் இருந்த பொருள்களைச் சூறையாடினர். ' பணியில் இருந்து விலக வேண்டும். இல்லையென்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என அந்த போலீஸ் உயரதிகாரியை எச்சரித்துள்ளனர் தீவிரவாதிகள். ஆனால், அவரது வீட்டில் இருந்தவர்களை, தீவிரவாதிகள் தாக்கவில்லை. இந்தச் சம்பவம் அங்கு, அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது.