Published:Updated:

முன்னாள் அமைச்சர் சந்திரகாசு காலமானார்!

Vikatan Correspondent
முன்னாள் அமைச்சர் சந்திரகாசு காலமானார்!
முன்னாள் அமைச்சர் சந்திரகாசு காலமானார்!

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் மற்றும் சபாநாயகர் சந்திரகாசு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.                                      

.

முன்னாள் அமைச்சர் சந்திரகாசு காலமானார்!

புதுச்சேரி  என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சந்திரகாசு, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சந்திரகாசு காலமானார்.  64 வயதான சந்திரகாசு, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியின்போது சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக இருந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து, தனியாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டபோது, அந்தக் கட்சியில் இணைந்த சந்திரகாசு, இருமுறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அவரது மறைவுக்கு புதுச்சேரி மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.