ஆர்.கே.நகரில் மீண்டும் மதுசூதனன்? - களமிறங்கிய ஓ.பி.எஸ் அணி

மதுசூதனன்

மதுசூதனன்

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் களத்தில் இறங்குவதாகத் தெரிகிறது. முன்னாள் அமைச்சரும், ஆர்.கே.நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மதுசூதனனுக்கு ஆர்.கே.நகர் தொகுதி மிகவும் அத்துப்படி. மதுசூதனனை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற வைத்துவிட்டால் நாம்தான் உண்மையான அ.தி.மு.க.என்று காட்டிவிடலாம் என்பதே  ஓ.பி.எஸ். அணியின்  கணக்கு என்கிறார்கள். 

மதுசூதனன் வெற்றிக்காக, சைதை எம்.எம்.பாபு, எழும்பூர் த.மகிழன்பன், ராயபுரம் நா.குமரன், பெரம்பூர் மாரிமுத்து, வேளச்சேரி அசோக், தேனை மொசைக் ஜெகதீஷ், திரு.வி.க.நகர் எபிநேசர் போன்றோர் ஆர்.கே.நகர் தொகுதியில் இப்போதே தேர்தல் வேலையில் இறங்கி விட்டனர். மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளரான ஆர்.எஸ்.ராஜேஷ்தான் மதுசூதனனுக்கு மாற்று வேட்பாளர் என்பதால் அவரும் ’தாராள’க் கொள்கையுடன் தொகுதியில் ரவுண்டு கட்டி வருகிறார். அதேவேளையில் 'இரட்டை இலை' சின்னம் இப்போது சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.விடம் இருப்பதால், மதுசூதனனின் தரப்பில் சிறிது குழப்பம் நிலவுகிறது. சசிகலா ஆதரவாளர்களோ, "சின்னம்மாவைப் பொதுச் செயலாளராக அறிவித்தது செல்லாது, என்றுதான் ஓ.பி.எஸ். அணி தேர்தல் ஆணையத்திடம் சொல்லியுள்ளது. ஆணையத்திடம் இருந்து பதில் வருவதற்குள் இரட்டை இலை சின்னத்தில்,  அண்ணன் டி.டி.வி. தினகரன் போட்டியிட்டு எம்.எல்.ஏவே ஆகிவிடுவார்" என்கின்றனர்.

-  ந.பா.சேதுராமன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!