மும்முனைப்போட்டியில் ஆர்.கே.நகர் தொகுதி! - களநிலவரம் இதுதான்! | Scenario three-sided contest r.k.nagar constituency. This is reality

வெளியிடப்பட்ட நேரம்: 06:56 (10/03/2017)

கடைசி தொடர்பு:06:50 (10/03/2017)

மும்முனைப்போட்டியில் ஆர்.கே.நகர் தொகுதி! - களநிலவரம் இதுதான்!

ஆர்.கே.நகர் தொகுதி

ஆர்.கே.நகர் தொகுதி

2016- ஏப்ரல் 29-ம் தேதி நிலவரப்படி ஆர்.கே.நகரில் உள்ள வாக்காளர்கள் விவரம்: ஆர்.கே.நகரில் தற்போது 1 லட்சத்து 25 ஆயிரத்து 881 ஆண்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 229 பெண்கள், திருநங்கைகள் 88 பேர் என மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 198 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் : 1,24,505, பெண்: 1,29,889, மூன்றாம் பாலினத்தவர் : 103, மொத்த வாக்காளர்கள் : 2,54,497

தி.மு.க. வேட்பாளரான சிம்லா முத்துச்சோழன், 2016-ல் இங்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 57,673 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். முதல்வர் வேட்பாளரான ஜெயலலிதா அப்போது, 97,218, வாக்குகள் பெற்று (39,537 வாக்கு வித்தியாசம்) வெற்றி பெற்றிருந்தார்.

அதே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் (2015) 1 லட்சத்து 60 ஆயிரத்து 432 வாக்குகளை ஜெயலலிதா பெற்றிருந்தார். அப்போது, சி.பி.ஐ. வேட்பாளர் மகேந்திரன் 9,710 வாக்குகள்  மட்டுமே பெற்றார்.  ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் தொகுதியில் டெபாசிட் தொகையை இழந்தனர்.

முதல்வராக ஜெயலலிதா இருந்த போது இடைத்தேர்தலை எதிர்கொண்டு பெற்றது 1,60,432 வாக்குகள், அதுவே பொதுத்தேர்தலை ஜெயலலிதா சந்தித்த போது, 97,218, என்று வாக்குகள் சுருங்கியது. ம.ந.கூட்டணியின் பொதுவேட்பாளர் டாக்டர் வசந்திதேவி 4,195 வாக்குகள் பெற்றிருந்தார். ஆர்.கே.நகர் மக்களோ, "சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியும் அ.தி.மு.க. பெயரையும், இரட்டை இலையையும் முன்னிறுத்திதான் இங்கு பிரசாரம் செய்யும்.  

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும், இங்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால்  அ.தி.மு.க.வுக்குள்  மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. கடைசி நேரத்தில் இரட்டை இலை சின்னம், கொடிகளை எந்தத் தரப்பினர் பயன்படுத்தலாம் என்ற பிரச்னையும் அடுத்தகட்டமாக  விஸ்வரூபமெடுக்கும். அது தி.மு.க. கூட்டணிக்கே சாதகமாக அமையும்" என்கிறார்கள் தொகுதி மக்கள்.

- ந.பா.சேதுராமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க