Published:Updated:

என்ன சொல்கிறார் அமித் ஷா?

என்ன சொல்கிறார் அமித் ஷா?
என்ன சொல்கிறார் அமித் ஷா?

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த இரண்டு மாநிலங்களிலும், பா.ஜ.க ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில், மணிப்பூரிலும் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. கோவாவில் இழுபறி நீடிக்கிறது.

என்ன சொல்கிறார் அமித் ஷா?

இந்நிலையில் தேர்தல் வெற்றி குறித்து, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொண்டதே, தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. இது நாட்டை புதிய திசைக்கு கொண்டு செல்லும். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளனர். மேலும், பஞ்சாபிலும் அதிக வாக்குகளை பெற்றுள்ளோம். வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி' என்றார்.