வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (13/03/2017)

கடைசி தொடர்பு:12:45 (13/03/2017)

முதல்வருக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம்! அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது ஈ.வி.கே.எஸ் புகார்

அண்ணா பல்கலைக்கழகத்  துணைவேந்தர் ராஜாராம், மீண்டும் துணைவேந்தர் ஆவதற்கு கல்லூரிகளில் பணம் வசூல்செய்கிறார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்துப் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 50 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறி, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜாராம், கல்லூரிகளில் பணம் வசூல்செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமாவும் தரகர்கள்மூலம் வினாத்தாளுக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குகிறார் என்றும், அவரும் பல்கலைக்கழகத் துணைவேந்தராக முயற்சிசெய்கிறார்' என்றும் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க