வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (14/03/2017)

கடைசி தொடர்பு:15:26 (14/03/2017)

நத்தம் விஸ்வநாதனை கைதுசெய்யத் தடை!

பணமோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரிய நத்தம் விஸ்வநாதன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, அது வரை அவரை கைதுசெய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.

திண்டுக்கல் அ.தி.மு.க இளைஞரணி துணைச் செயலாளர் சபாபதி, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது 4 கோடி ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததாக, நத்தம் விஸ்வநாதன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, நத்தம் விஸ்வநாதன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்தார். வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், நாளை 15-ம் தேதி வரை விஸ்வநாதனைக் கைதுசெய்யக்கூடாது என்று கூறி, வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க