வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (14/03/2017)

கடைசி தொடர்பு:16:41 (14/03/2017)

டெல்லியில் நாளை தேர்தல் ஆணையரை சந்திக்கும் ஓ.பன்னீர்செல்வம்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை நாளை 12 மணிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவுள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் முறையிட்டிருந்தார்.

இதுதொடர்பாக விளக்கமளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சசிகலா சார்பில் கடந்த 10-ம் தேதி 70 பக்க விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பன்னீர்செல்வம் அணி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பன்னீர்செல்வம் அணி சார்பில் அதற்கு இன்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாளை ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்று விளக்கம் அளிக்கவுள்ளார். இதற்காக அவர் இன்று டெல்லி செல்ல உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க