வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (15/03/2017)

கடைசி தொடர்பு:14:06 (15/03/2017)

நத்தம் விஸ்வநாதனுக்கு முன்ஜாமீன்

பணமோசடி வழக்கில் நத்தம் விஸ்வநாதனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. திண்டுக்கல் காவல்நிலையத்தில் வாரம் ஒருமுறை கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தேர்தல் செலவுக்காகப் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சபாபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நத்தம் விஸ்வநாதன் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. வாரம் ஒருமுறை  திண்டுக்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.