வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (15/03/2017)

கடைசி தொடர்பு:13:51 (15/03/2017)

'தளபதியின் சாதனைகளால் வெற்றி பெறுவேன்' - மார்தட்டும் மருது கணேஷ்

மு.க.ஸ்டாலினின் சாதனைகளால் ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன்' என்று தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு தி.மு.க சார்பில் பகுதிச் செயலாளர் மருதுகணேஷை வேட்பாளராக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருதுகணேஷ், 'நான் ஆர்.கே.நகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கிறேன். எனவே மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது. மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் தளபதியின் சாதனைகளைச் சொல்லி வெற்றி பெறுவேன்.

அ.தி.மு.கவின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும், தி.மு.க ஆட்சியின் சாதனைகளையும் ஓட்டுச் சேகரிப்பின்போது எடுத்துக் கூறுவேன். தனக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி' என்றார்.