வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (16/03/2017)

கடைசி தொடர்பு:15:26 (16/03/2017)

பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்றார், அமரிந்தர் சிங்!

Amarinder Singh

பஞ்சாப் மாநிலத்தின் 26-வது முதல்வராக அமரிந்தர் சிங் இன்று பதவியேற்றார். சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் வி.பி.சிங் பட்நோர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில், 77 தொகுதிகளில் வெற்றிபெற்றது. கேப்டன் அமரிந்தர் சிங் பஞ்சாப் மாநில முதல்வராக இன்று பதவியேற்றார். அவருடன் இரண்டு பெண் அமைச்சர்கள் உட்பட 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இமாச்சலப் பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, அவரது மகன் ஓமர் அப்துல்லா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, முதல்வராகப் பதவியேற்கும் அமரிந்தர் சிங்குக்கு, 'பஞ்சாப்பின் வளர்ச்சிக்காக பணியாற்றவுள்ளதற்கு வாழ்த்துகள்' என்று  பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.