வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (17/03/2017)

கடைசி தொடர்பு:14:13 (17/03/2017)

பியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு - உதய் திட்டம் குறித்து ஆலோசனை!

மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்தச் சந்திப்பின்போது, டான்ஜெட்கோ நிர்வாக இயக்குநர் சாய்குமாரும் பங்கேற்றார். அந்த ஆலோசனையின் போது, உதய் மின் திட்டத்தைச் செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் அந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் இழப்பீடுகளை ஈடுசெய்வது குறித்தும் ஆலோசனைசெய்யப்பட்டது.

மேலும், பியூஷ் கோயலிடம் 'கூடங்குளம் 3,4-வது அணு உலையில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும். காற்றாலைகள்மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டுசெல்வதற்கு வழித்தடம் வேண்டும்' என்று தங்கமணி கோரிக்கை விடுத்தார். மத்திய அரசு நாடு முழுவதும் உதய் மின் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிர ஆர்வம் காட்டிவருகிறது.