'மே-14 ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது சிரமம்' | State election commission's answer to High court on local body elections

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (17/03/2017)

கடைசி தொடர்பு:14:49 (17/03/2017)

'மே-14 ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது சிரமம்'

'மே-14 ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2016-ம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் அடுத்தடுத்த சில காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது.

இந்நிலையில், 'மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்' என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். மே14-ம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல்-24-ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும்' என்று சமூக செயற்பாட்டாளர் பாடம் நாராயணன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திடம் பதில் கேட்டது. இதுகுறித்து பதிலளித்த மாநிலத் தேர்தல் ஆணையம், 'மே-14 ம் தேதிக்குள் தேர்தல் நடத்துவது சிரமம். மனுதாரரின் கோரிக்கைப்படி ஏப்ரல் 24-ம் தேதி தேர்தல் நடத்த முடியாது' என்றும் பதிலளித்துள்ளது.