வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (17/03/2017)

கடைசி தொடர்பு:16:28 (17/03/2017)

'தமிழக மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடைபெறாது' - சுஷ்மாவை சந்தித்தபின் பொன்னார், ஜெயக்குமார் பேட்டி

'தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை இனிமேல் தாக்குதல் நடத்தாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதியளித்ததாக' மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்துப் பேசினர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,'இலங்கை அரசு கைப்பற்றிய 136 விசைப்படகுகள் மீட்கப்படும், தமிழர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதியளித்தாக' தெரிவித்தார். மேலும் 'ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு 250 கோடி ரூபாய் தர ஒப்புதல் தெரிவித்துள்ளது' என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், 'மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவிடம் நம்முடைய தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார்' என்றார்.