'ஆர்.கே நகரை கோவா ஆக்குவாரா கங்கை அமரன்!?’ - ‘குடி’மகனின் ஆதங்கம் #VikatanFun | A satire article about Gangai amaran

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (18/03/2017)

கடைசி தொடர்பு:16:41 (18/03/2017)

'ஆர்.கே நகரை கோவா ஆக்குவாரா கங்கை அமரன்!?’ - ‘குடி’மகனின் ஆதங்கம் #VikatanFun

பா.ஜ.க-வின் வேட்பாளராக ஆர்.கே நகரில்  கங்கை அமரனை நிறுத்தியிருக்காங்க. அவர் எப்படி எல்லாம் வாக்கு சேகரித்து ஸ்கோர் பண்ணலாம்னு அவருக்குச் சில ஐடியாஸ்...

* எப்பவும்  சொங்கித்தனமாக நடைபெறும் தேர்தல் பிரசாரத்தை எல்லாம் ஆடிக்கிட்டு, பாடிக்கிட்டு, பாடிக்கிட்டே ஆடிக்கிட்டுனு புதுப்புது ஃபிளேவர்ஸ்லாம் சேர்த்து ஒரு பாட்டு பட்டிமன்றம் மாதிரியே நடத்தி மக்களை கலகலப்பில் ஆழ்த்தலாம். (கலகலப்பு கைகலப்பில் முடியாது பார்த்துக்கொள்ள வேண்டியது அவர்களின் வேலை).

கங்கை

* 'தமிழ் இசைக்கும் எங்களுக்கும் எப்படி ஆதிகாலத்துல இருந்தே சம்பந்தம் இருக்குதோ அதே மாதிரிதான் விதியாய்ப் பார்த்து   தமிழிசைக்கும், எங்களுக்கும் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தமிழ் இசையோடு சேர்ந்து நாங்க வாகை சூடியது போல  தமிழிசையுடனும் வாகை சூடுவோம் என்பது உறுதி'ன்னு காவியமாகப் பேட்டி தட்டி பழம் நழுவி பாலில் விழுந்த குரூப்புக்கே செம டஃப் கொடுக்கலாம்.

* வெங்கட்பிரபு படத்துலேயே மிஸ் ஆகாம வந்திடுற பிரேம்ஜி இதுல மட்டும் எஸ் ஆயிடுவாரா என்ன? ஆட்சியா நடந்துட்டு இருக்கு? என்ன கொடுமை சார்ங்கிறதுல  ஆரம்பிச்சு அப்படியே இதுவரைக்கும் பேசியிருக்கிற மொத்த டயலாக்கையும் கோத்து ரெடி பண்ணுனா பிரசாரம் ஓவர். மங்காத்தா 2 க்கோ சென்னை 3 க்கோ அறிவிப்பு  பண்ணப்போறோமுன்னு சொல்லியும் கூட்டத்தைக் கூட்டிக் காட்டி எதிரணிக்கு கிலி ஏற்படுத்தலாம். எவ்வளவோ பண்ணிட்டாரு. அவருடைய அப்பாவுக்காக இதைப் பண்ண மாட்டாரா? (கிரிக்கெட்டுன்னதும் ஓட்டே இல்லாத சின்னப் பசங்களாகக் கூடிட்டா அதுக்கு நிர்வாகம் பொறுப்பு இல்லை)

* சின்னத்துக்காகவெல்லாம் ரொம்ப மெனக்கெடவே வேணாம். இருக்கவே இருக்கிற 'ஆகாயத்தாமரை அருகில் வந்ததே'வுல தொடங்கி 'ஆயிரம் தாமரை மொட்டுகளே' வரைக்கும் பாட்டாகவே பாடுனா தாமரை சின்னத்துக்கான பாதிப் பிரசார வேலை முடிஞ்சிடும். இடைஇடையில இந்தப் பாட்டை கம்போஸ் பண்னும்போது அந்தக் காலத்துல நானும், அண்ணாவும் பார்த்தீங்கனா..னு சில குட்டிக்கதைகளையும் எடுத்துவிடணும்.

* 'எல்லோரும் கட்சியில சேர்ந்ததுக்கு அப்புறம்தான் பின்னாடி 'ஜி' சேர்த்துக்கிறாங்க. என்னை அப்பவே பல பேர் மகா குரு ஜி மகா குருஜினுதான் கூப்பிடுவாங்க. அப்பவே மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இப்படி நடுத்தெருவுல நின்னு இந்தக் கட்சிக்காக ஓட்டுக்கேட்பேன்'னு என அன் டோல்டு ஸ்டோரிகளை அன் லிமிட்டெட் ஆக  அவிழ்த்துவிடலாம்.

 

கங்கை

* 'பேருலேயே கங்கையை வெச்சிருக்கிற எனக்கு காவிரி எல்லாம் ஒரு விஷயமே இல்லை. எனக்கு மட்டும் ஓட்டுப்போட்டுப் பாருங்க. காவிரி என்ன காவிரி, நயாகரா தண்ணியையே தமிழ்நாட்டுக்குத் திருப்பிவிடச் சட்டம் கொண்டுவரச் செய்வேன்'னு மனசாட்சிக்கு மாத்திரை கொடுத்து  தூங்கவெச்சுப் பிரசாரம் பண்ணிப் பார்க்கலாம்.

* பிரசாரம் பண்ணுற நேரம் போக ஃப்ரீ டைமில் கட்சியில் இருக்கிற அடிப்பொடிகளை எல்லாம் அள்ளிப்போட்டு ஒரு மீட்டிங்கை வெச்சு  ஸ்ருதி சுத்தமா எப்படி மேடையில பேசுறது, எட்டுக்கட்டையில இழுத்து, சவுண்ட் விட்டு எப்படி ஓட்டு வாங்குறதுனு ஜட்ஜாவே மாறி க்ளாஸ் எடுக்கலாம்.

* சிங்கப்பூர் மாதிரி மாற்றிக்காட்டுவேன் சிங்கார நகரமாக மாற்றிக்காட்டுவேன்னு சொல்லாம ஒரு சேஞ்சாக எனக்கு வாக்களித்தால் ஆர்.கே நகரையே ஒரு மினி கோவாவாக மாற்றிக்காட்டுவேன்னு சொல்லி பேடன்ட் ரைட்ஸ் வாங்கி வெச்சிருக்கிற வித்தையில ஒண்ணை நச்சுனு இறக்கிப் பார்க்கலாம்.

* எது எப்படியோ, என்ன  பேசினாலும் கடைசியில 'இது  என் தனிப்பட்டக் கருத்து'ங்கிறதை மட்டும் மறக்காமச் சொல்லித்தான் உரையை முடிக்கணும். அப்போதான் நீங்க பா.ஜ.க.ங்கிறதையே மக்கள் நம்புவாங்க. உங்களுக்கும் அதுலதான் இருக்கிறோம்கிற ஃபீலும் வரும்.

* ஹ்ம்ம்.. இவ்வளவு செஞ்சும் ஒண்ணும் வேலைக்காகலைனா, வேற என்ன, கரகாட்டக்காரன் பார்ட்- 2 படம் எடுக்க ப்ளான் பண்ண வேண்டியதுதான்.

- ஜெ.வி.பிரவீன்குமார்


டிரெண்டிங் @ விகடன்