Published:Updated:

'அட்டாக்', அப்ரூவரா? என்கவுன்ட்டரா?

மதுரையை மையம்கொள்ளும் போலீஸ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

டாகூடம் பண்ணி​விட்டு குண்டர் சட்டத்தில் உள்ளே போனவர்கள், பெய​ருக்கு முன்னால் 'மிசா’ என்று அடைமொழி போட்டுக்கொள்வது போல், 'அட்டாக்’ கட்டிங் ஹேர் ஸ்டைலால், கீரைத் துறை பாண்டி, 'அட்டாக்’ பாண்டி ஆனார். மற்றபடி யாரையும் 'அட்டாக்’ பண்ணி, இந்தப் பட்டம் வாங்கவில்லை! 

கமுதி அருகே உள்ள கோவிலாங்​குளத்தில் இருந்து பிழைப்புக்காக மதுரைக்கு வந்தவர் 'அட்டாக்’ பாண்டி. 20 வருடங்களுக்கு முன்பு, மதுரை கீரைத் துறையில் கமுதி ஏரியாக்காரர்கள் சிலர்  சாராய சாம்ராஜ்யம் நடத்தி வந்தார்கள். எதிர்த்துக் கேட்டால்... போலீஸாக இருந்தாலும் போட்டுத் தள்ளுவார்கள். ஆரம்பத்தில் பாண்டிக்கும் இந்தக் கும்பலோடு சகவாசம் இருந்தது. அந்த நேரத்தில்

'அட்டாக்', அப்ரூவரா? என்கவுன்ட்டரா?

சிறிய அளவில் கந்து வட்டித் தொழில் செய்து வந்தவர், சைடு டிராக்கில் கட்டப் பஞ்சாயத்துகளிலும் கோலோச்சினார். கீரைத் துறை, மாகாளிப்பட்டி மார்க்கெட் குத்தகை, காலம் காலமாக பாண்டி குடும்பத்திடம்தான் இருக்கிறது. இவர்களை மீறி யாரும் அங்கே உள்ளே வர முடியாது.

ஒரு கட்டத்தில் தனக்கு அரசியல் பாதுகாப்பு வேண்டி தி.மு.க-வில் ஒட்டிக்கொண்டவர், 1992-ல் மதுரை 8-ம் பகுதி தொண்டர் அணி அமைப்பாளர் ஆனார். அதன் பிறகு மாவட்ட அமைப்பாளர் ஆகும் அளவுக்கு அரசியல் அந்தஸ்தை வளர்த்துக்கொண்டார். வேலு என்ற தி.மு.க. பிரமுகர் இவர் மீது வெடிகுண்டு வீசியதாக, 2001-ல் விளக்குத் தூண் ஸ்டேஷனில் வழக்கும் உண்டு.

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி சிறையில் இருந்தபோது, அவரது வீட்டுக்கு எஸ்கார்டாக இருந்தார் பாண்டி. தனது கூட்டாளிகள் 10 பேருடன் அழகிரி வீட்டுக்கு அருகிலேயே தனியாக ஒரு வீட்டில் தங்கிக்கொண்டு, ராப்பகலாகப் பாதுகாத்தார். அழகிரி ஜாமீனில் வெளியே வந்த பிறகும், எஸ்கார்ட் தொடர்ந்தது. அப்போது 'தா.கிருட்டிணனின் உறவினர்களால் தனக்கு ஆபத்து வரலாம்’ என்ற அச்சம் இருந்ததால், அழகிரி எங்கே போனாலும் அவருக்கு முன்னால் பரிவாரங்களோடு பாண்டியின் பைலட் கார் போகும். அதேபோல் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கும் தோழனாக, பாதுகாவலனாக, பல நேரங்களில் கார் சாரதியாகவும் இருந்திருக்கிறார். எந்த ரூபத்திலும் அழகிரியை ஆபத்து நெருங்கிவிடக் கூடாது என்பதற்காக, கட்சிக்காரர்கள்கூட அவரை எளிதில் நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டார். அதனாலே பலரின் அதிருப்திக்கும் ஆளானார்.

மதுரைக்குள் மட்டும் பிரபலமாக இருந்த 'அட்டாக்’ பாண்டி, அகில இந்தியப் பிரபலமானது மதுரை தினகரன் அலுவலக 'அட்டாக்’ சம்பவத்துக்குப் பிறகுதான். தா.கிருட்டிணன் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம், பட்டம், பதவி, பணம், காசு என பதவிசாக இருப்பதைப் பார்த்துப் பொங்கியவர், அந்த லட்சியத்தை(?) தானும் அடைவதற்காகவே, படை பட்டாளத்துடன் சென்று தினகரன் அலுவலகத்தை தீக்கிரையாக்கினார். இந்த வழக்கில் இருந்து வெளியில் வந்ததும், வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் பதவிக்கு அடிபோட்டார். அப்போது அழகிரியின் நிழல் பிரமுகர் ஒருவர் தடை போட்டார். அது தெரிந்து, அந்த மனிதரிடம் பிஸ்டலைக் காட்டி பாண்டி மிரட்டியதாகக்கூட ஒரு

'அட்டாக்', அப்ரூவரா? என்கவுன்ட்டரா?

செய்தி உண்டு. இதன் பிறகு, வேளாண் விற்பனைக் குழுத் தலைவராக இருந்த கணேசனை, அவசரமாக ராஜினாமா செய்யவைத்து, அங்கே 'அட்டாக்’ அமரவைக்கப்பட்டார். இவருக்காக ஒன்றிரண்டு கல் குவாரிகள்கூட கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்டதாகச் சொல்வார்கள்.

ஆசை யாரைவிட்டது? அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், கான்ட்ராக்ட் விவகாரங்​களிலும் நுழைய ஆரம்பித்தார் பாண்டி. இதனால், அழகிரியின் நிழலுக்கும் இவருக்கும் பனிப் போர் உச்சகட்டத்துக்குப் போனது. அந்த நேரத்தில்தான், ஆள் கடத்தல் வழக்கு ஒன்றில் எக்குத்தப்பாக மாட்டினார் பாண்டி.

கீரைத் துறையில், 'ஸ்ரீ ஜெயம் ரியல்ஸ் அன்ட் கேம்ஸ்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. பாண்டியின் அக்கா​வுக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அசோக்குமார். முதலீடு செய்யும் பணத்தை ஐந்தே மாதங்களில் ஐந்து மடங்​காகத் திருப்பித் தருவதாகச் சொல்லி ஆயிரக்கணக்கானவர்களிடம் பணம் வசூலித்த அசோக்குமார், அதில் ஏக்கர் கணக்கில் இடங்களை வாங்கிப் போட்டார்.

இந்த நிலையில் 5.11.2009 அன்று, அந்த நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. அடுத்த 10 நாளில்,

'அட்டாக்', அப்ரூவரா? என்கவுன்ட்டரா?

17 கோடியுடன் 'அட்டாக்’ பாண்டி, அசோக்குமாரைக் கடத்திவிட்டதாகப் பிரச்னை வெடித்தது. அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அசோக்குமாரின் மைத்துனர் வீரணனும், அடுத்து அதிரடியாகக் கடத்தப்பட்டார். நான்கு நாட்கள் கழித்து கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பி வந்த வீரணன், போலீஸில் புகார் கொடுத்தார். 'அட்டாக்’ பாண்டியைக் கருவறுக்கக் காத்துக்கொண்டு இருந்த நிழல் பிரமுகர் இந்த விவகாரங்கள் அனைத்தையும் அழகிரியின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். ''உங்க பேரைச் சொல்லிக்கிட்டு 'அட்டாக்’ இப்பிடி  அழிச்சாட்டியம் பண்ணி, கட்சிக்குக் கெட்ட பேர் உண்டாக்குறான்!'' என்று சொல்லி அழகிரியை உசுப்பேற்றவே, தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து, வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் பதவியையும் பறித்தார் அழகிரி.

தனக்கு எதிராக அண்ணனை அஸ்திரம் எடுக்க​வைத்து​விட்டார்கள் என்றதுமே ஆடிப்போன 'அட்டாக்’, ''என் உறவினர்கள் நிறையப் பேர் அசோக்குமாரின் நிதி நிறுவனத்தில் பணம் போட்டு இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஏமாற்றி​விட்டு ஓடப் பார்த்தார். அதனால்தான், நான் அவருக்கு நெருக்கடி கொடுத்து பணத்தை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்தேன்!'' என்று சமாதானம் சொன்னார். ஆனால், அதை யாரும் நம்புவதாக இல்லை. வீரணன் கொடுத்த புகாரின் பெயரில் 'அட்டாக்’ மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட செக்ஷன்களில் தி.மு.க. ஆட்சியிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் 'அட்டாக்’ தலைமறைவாக வேண்டிய சூழல்.

'அட்டாக்', அப்ரூவரா? என்கவுன்ட்டரா?

''அட்டாக் பாண்டியின் கதையை முடித்துவிடத் திட்டமிட்டார்கள். அதற்காகவே என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி ஒருவரை மதுரைக்குக் கூட்டி வந்தார்கள். எந்த நேரத்திலும் தன் தலைக்கு ஆபத்து வரலாம் என்பதால், 'அட்டாக்’ தன்னுடைய நிலையை விளக்கி அழகிரிக்கு உருக்கமாக கடிதம் அனுப்பினார். அப்படியும் சமாதானம் அடையாத அழகிரியை, அவரது மனைவி காந்திதான் சமாதானப்படுத்தினார். அப்புறம்​தான், நடவடிக்கைகள் கிடப்புக்குப் போக, சுதந்திரமாக வெளியில் நடமாட ஆரம்பித்தார் 'அட்டாக்’. அதற்குள்ளாக, சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டதால்... அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து, தொண்டர் அணி அமைப்பாளர் ஆக்கினார் அழகிரி!'' என்று சொல்லும் தி.மு.க-வினர்,

''ஆட்சி மாற்றத்தால் தலைக்கு மீண்டும் சிக்கல் வரலாம் என்பதால், அ.தி.மு.க. சைடுக்குத் தூது அனுப்பினார் 'அட்டாக்’. இவரைவைத்து சில கணக்குகளை நேர் செய்ய நினைத்தவர்கள், 'தினகரன் எரிப்பு வழக்கில் அப்ரூவராக வேண்டும்’ என கண்டிஷன் போட்டார்கள். ஆனால், பாண்டி உடனடியாக ரியாக்ஷன் காட்டவில்லை. அதனால்​தான், வழக்குகளை அடுக்கடுக்காகப் பாய்ச்சி அப்ரூவர் ஆக்க நினைக்கிறார்கள்!'' என்றும் சொல்கிறார்கள்.

மதுரை தி.மு.க.வினர் மத்தியில் இன்னொரு ஷாக் செய்தியும் பரவி உள்ளது. ''அட்டாக் வெளியில் நடமாடுவது தங்களுக்கே ஆபத்து என்று இங்கு உள்ள பலர் நினைக்கிறார்கள். 'போலீஸ்காரங்க பாண்டியை என்கவுன்ட்டர் செய்தால், நமக்கு நல்லதுதானே?’ என்று ஒரு பிரமுகர் சொல்ல ஆரம்பித்து உள்ளார். அதனால், இனி எதுவும் நடக்கலாம்!'' என்கிறார்கள். அதற்கேற்ப இப்போது, 'அட்டாக்’குக்கு எதிராக புகார்களும் வழக்குகளும் வரிசை கட்டி நிற்கின்றன. இவை அனைத்துமே அழகிரிக்கு வைக்கப்படும் குறியாக மாறி வருகிறது...'' என்கிறார்கள்.

''கைது செய்யப்பட்டு உள்ள 'அட்டாக்’ பாண்டி மீது புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வந்து புகார் கொடுக்கலாம். புகாரில் உண்மை இருந்தால்... கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். மதுரை மக்கள் அச்சமின்றி நிம்மதியாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்!'' என்கிறார் மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன்.

மதுரை மக்களும் இதைத்தான் எதிர்பார்க்​கிறார்கள்!

- குள.சண்முகசுந்தரம், கே.கே.மகேஷ்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஈ.ஜெ.நந்தகுமார் 

''அட்டாக் பேரைச் சொன்னா ஊரே நடுங்கும் தெரியுமில்ல?''

மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்கு நேர் எதிராக இருக்கும், சுமார்

'அட்டாக்', அப்ரூவரா? என்கவுன்ட்டரா?

2 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் கடைகளை வாடகைக்கு எடுத்துவிட்டு, ஸ்வாகா செய்ய நினைக்கும் வழக்குதான் 'அட்டாக்’ பாண்டி மீது இப்போது பாய்ந்து உள்ளது.

வாடகைக்குக் கொடுத்துவிட்டு சொத்தை இழந்த கல்பனா என்ற பெண், மதுரை கமிஷனர் அலுவ​லகத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

'பேலஸ் ரோட்டில் கதவு எண் 119-ல் உள்ள எனது ஓட்டு வீட்டை கடந்த 2004-ம் ஆண்டு ஆர்.கே.பாலன் என்பவருக்கு

'அட்டாக்', அப்ரூவரா? என்கவுன்ட்டரா?

2.75 லட்சத்துக்கு ஒத்திக்குக் கொடுத்தேன். 2005-ம் ஆண்டு என் கணவர் ஈஸ்வர்லால் இறந்ததும், ஒத்திப் பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டேன். ஆனால், அவர் காலி செய்யவில்லை. திடீரென 'அட்டாக்’ பாண்டியின் அக்கா கணவரான மாரிமுத்து வந்தார். இறந்துபோன என் கணவரிடம் ஏற்கெனவே வாடகைக்குப் பெற்றதுபோல், போலியான வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை தயாரித்து வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டார். நியாயம் கேட்ட என்னிடம், 'நாங்க 'அட்டாக்’ பாண்டியோட சொந்தக்காரங்க. அவர் பெயரைச் சொன்னா, ஊரே நடுங்கும் தெரியும்ல? மறுபடியும் இடம் என்னது, வீடு என்னதுன்னு உரிமை கொண்டாடிக்கிட்டு வந்தால்... குடும்பத்தோடு குளோஸ் பண்ணிடுவோம்’னு மிரட்டினாங்க...' என்று புகார் கொடுத்தார். இதற்குப் பிறகுதான் அட்டாக் வளைக்கப்பட்டார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு