உத்தரப்பிரதேச அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு - முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களுக்கான துறைகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உள்துறை, நிதி அமைச்சகத்தை யோகி தன்வசம் வைத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதல்வராக மார்ச் 18-ம் தேதி யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 44 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இருப்பினும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தது.

யோகி ஆதித்யநாத் நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து அவருடைய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அமைச்சர்களுக்கான துறைகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உள்துறை, நிதி அமைச்சகத்தை யோகி தன்வசம் வைத்துக் கொண்டார்.

துணை முதல்வர்கள் கேஷவ் பிரசாத் மவுரியாவுக்கு பொதுப்பணித்துறை, நீர்பாசனத்துறையும், தினேஷ் சர்மாவுக்கு உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் மற்றும் தொழில்நுட்பம், பிரசாத் மவுரியாவுக்கு கூட்டுறவுத் துறை, சித்தார்த் நாத் சிங்கிற்கு சுகாதாரத்துறை, ரீட்டா பகுகுணாவுக்கு பள்ளிக்கல்வித் துறை, ஸ்வாதி சிங்கிற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!