''இரட்டை இலைச் சின்னம் முடக்கம் என்பது இடைக்கால உத்தரவே'' - தேர்தல் ஆணையம் அறிவிப்பு! #TWOLEAVES #AIADMK

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், எங்களுக்கு தான் 'இரட்டை இலை' சின்னம் வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் கடுமையாகப் போட்டி போட்டு வந்தனர். இந்த நிலையில், 'இரட்டை இலை' சின்னம் முடக்கம் என்று தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கட்சியின் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ எங்கும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கூடுதலாக அறிவித்துள்ளது.

இதனுடன் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது இடைக்கால உத்தரவுதான். மேலும் இருத்தரப்பினரும், நியாயமாக நடந்துகொள்ளதான் இப்படியான உத்தரவைப் பிறப்பித்துள்ளோம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!