வெளியிடப்பட்ட நேரம்: 00:37 (23/03/2017)

கடைசி தொடர்பு:00:44 (23/03/2017)

"எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்" - டிடிவி தினகரன் திட்டவட்டம்! #TWOLEAVES #AIADMK

 

 

ஆர்.கே நகர்  இடைத்தேர்தலில், ''ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பினர் யாருமே, இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது'' என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

'இரட்டை இலை சின்னம் முடக்கம்' குறித்து டி.டி.வி. தினகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, "தேர்தல் ஆணையம் தற்காலிகமாகத்தான் இரட்டை இலை சின்னத்தை முடக்கியுள்ளது. எனவே நாங்கள் உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்து இரட்டை இலை சின்னத்தை நிச்சயமாக மீட்டெடுப்போம். ஏனெனில் அரசியலைப் பொறுத்தமட்டில், எந்தவொரு நிகழ்வையும் அதிர்ச்சியாக எடுத்துக்கொள்ளக்கூடாது, அனுபவமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் சரித்திரம் திரும்பி இருக்கிறது. எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப் பின், இதேபோல இரட்டை இலை சின்னம் முடக்கம் செய்யப்பட்டது. அப்போதும் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்கவில்லை. அப்போது இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க, அம்மாவுடன் சேர்ந்து நாங்கள் போராடினோம். அதன் விளைவாகவே இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்தது. அதுபோல இந்த முறையும், ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றிபெற்று இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே உரியதாக்குவோம். ஒன்றரை கோடி உண்மையான தொண்டர்கள் எங்களோடு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் எங்களுக்கு எந்த பிரச்னையையும் இல்லை. நாங்கள் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், ஆர்.கே நகர் தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம். அதுமட்டுமல்லாமல் நான் அம்மாவின் மாணவன். அவரிடம்தான் அரசியல் பயின்றேன். இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 'இரட்டை இலை' சின்னத்தை மீட்டெடுப்போம்" என்று கூறினார்.