வெளியிடப்பட்ட நேரம்: 00:53 (23/03/2017)

கடைசி தொடர்பு:07:33 (23/03/2017)

"இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது, நியாயமான விஷயம் தான்"... தமிழிசை சௌந்தரராஜன்! #TWOLEAVES #AIADMK

 

 

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், ''ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பினர் யாருமே 'இரட்டை இலை' சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது'' என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

'இரட்டை இலைச் சின்னம் முடக்கம்' குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது," இரட்டை இலைச் சின்னம் முடக்கம் என்பது ஒரு நியாயமான விஷயம். எம்.ஜி.ஆர் இறந்தபோது, இதே போலத்தான் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற பிரச்னை எழுந்தது. அதனைத் தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னம் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. ஏனென்றால் அதற்கான முழுத்தகுதியும் அவரிடம் இருந்தது. இப்போது அண்ணா திராவிட முன்னேற்ற கழகமே இரண்டாகப் பிளந்திருக்கிறது. எனவே தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது நல்ல விஷயம் தான். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதற்குப் பின்னால் பா.ஜ.க அரசின் சதி இருப்பதாகச் சொல்லிவருகிறார்கள். இது முழுக்க முழுக்க ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு, அப்படி சதி செய்துதான் முன்னுக்கு வரவேண்டும் என்ற எந்த அவசியமும் எங்களுக்குக் கிடையாது. கட்சி பிளவுப்பட்ட காரணத்தினால், இடையில் புகுந்து வெற்றி பெறலாம் என்ற எண்ணமும் எங்களுக்கு இல்லை. நேர்மையான முறையில் தேர்தலில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோம். ஏனென்றால் மக்களும் மாற்றத்தை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்." என்றார்.