"சின்னத்தையும், கட்சியையும் ஒருசேர மீட்போம்" - ஓ.பி.எஸ் உறுதி! #TWOLEAVES #AIADMK

 

 

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், ''ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பினர் யாருமே 'இரட்டை இலை' சின்னத்தைப் பயன் படுத்தக்கூடாது'' என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது குறித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், "இரட்டை இலைச் சின்னம், சசிகலா தரப்பினருக்கு செல்லக்கூடாது; எங்களுக்குதான் வேண்டும் என்பதற்கான வலுவான ஆதாரங்களை, தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தோம். அப்படி இருந்தும் தேர்தல் ஆணையம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதனால் நாங்கள் அனைவரும் 'இரட்டை இலை' சின்னத்தை சட்டப்படி மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். எப்படி இருந்தாலும் சின்னத்தையும், கட்சியையும், ஆட்சியையும் நாங்கள் ஒருசேர மீட்டெடுப்பது உறுதி" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!