அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு உத்தரவு!

T.T.V.Dinakaran

சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் இன்று டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க அம்மா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மீது, சொகுசு கார் இறக்குமதி மற்றும் அந்நியச் செலாவணி மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

1996-ம் ஆண்டு, இங்கிலாந்தில் இருந்து தொலைக்காட்சி தொடர்பான சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர். இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் இரண்டு வழக்குகளில் இருந்து டி.டி.வி.தினகரனை நீதிமன்றம் விடுவித்தது. மேலும், ஐந்து வழக்குகள் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ளன.

இது தொடர்பான வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தல் பணியின் காரணமாக வழக்கை இன்னொரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, இருதரப்பினரும் பிற்பகலில் தங்களது வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!