டி.டி.வி.தினகரன், தீபா வேட்பு மனுக்கள் ஏற்பு

தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மசூதுதனன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை வேட்பாளர் தீபா, பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதில் அ.இ.அ.தி.மு.க அம்மா கட்சியின் சார்பில் தொப்பி சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் டி.டி.வி.தினகரனின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதேபோல ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன், தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன், தே.மு.தி.க வேட்பாளர் மதிவாணன் உள்ளிட்டவர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியரின் மனு நிராகரிக்கப்பட்டது. முன்னதாக டி.டி.வி.தினகரனின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என்று ஆட்சபேனை தெரிவித்து மருது கணேஷ் சார்பில் தேர்தல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த ஆட்சேபனையை தேர்தல் அலுவலர் நிராகரித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!