மு.க.ஸ்டாலின் மீது டி.டி.வி.தினகரன் பகீர் குற்றச்சாட்டு

t.t.v. dinakaran

எங்களுடைய ஆட்சியை கவிழ்க்க மு.க.ஸ்டாலின் சதி செய்கிறார் என்று சசிகலா அணியை சேர்ந்த டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அ.இ.அ.தி.மு.க அம்மா  கட்சியின் சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பில் மதுசூதனனும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தீபாவும் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனு பரிசீலனை நேற்று முடிவடைந்த நிலையில் 82 பேரின் மனுகள் ஏற்கப்பட்டன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், 'தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று சிலர் சதி செய்கின்றனர். எங்களுடைய ஆட்சியை கவிழ்க்க நண்பர்கள் மூலம் எம்.எல்.ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆர்.கே.நகரில் யார் பணம் பட்டுவாடா செய்கிறார்கள் என்பதை மக்களிடம் கேட்டால் தெரியும்' என்றார்.

படம்: ஜெரோம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!