டி.டி.வி.தினகரன் மனு தள்ளுபடி! | Egmore court dismissed T.T.V.Dinakaran petition

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (27/03/2017)

கடைசி தொடர்பு:15:29 (27/03/2017)

டி.டி.வி.தினகரன் மனு தள்ளுபடி!

T.T.V.Dinakaran

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியும் வரை, தன்மீது தொடரப்பட்ட அந்நியச் செலாவணி வழக்கை ஒத்திவைக்கக்கோரி டி.டி.வி.தினகரன்  தாக்கல்செய்த மனுவை, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.

1996-ம் ஆண்டு, இங்கிலாந்தில் இருந்து தொலைக்காட்சி தொடர்பான சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர்.

இதுதொடர்பாக, தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், இரண்டு  வழக்குகளில் இருந்து நீதிமன்றம் தினகரனை விடுவித்தது. மேலும், ஐந்து வழக்குகள் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில், மார்ச் 24-ம் தேதி தினகரன்  சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனு, எழும்பூர் நீதிமன்றத்தில்  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் மனுவை நீதிபதி தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.