டி.டி.வி.தினகரனுக்கு எதிராக மூன்று பேர் போர்க்கொடி!

TTV Dinakaran

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிராக, மூன்று பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில், ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுக்கள் பரிசீலனை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. அப்போது, தினகரனின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று, தி.மு.க சார்பில் தேர்தல் அலுவலர் பிரவீன் நாயருக்கு மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் டி.டி.வி.தினகரனின் மனு, தேர்தல் அலுவலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு எதிராக மூன்று பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், டி.டி.வி.தினகரன் தாக்கல்செய்த வேட்புமனுவில், ஆர்.கே.நகர்த் தொகுதியைச் சார்ந்த பத்துப் பேரிடம் கையெழுத்துப் பெறவில்லை என்றும், அ.தி.மு.க-வுக்குத் தடை உள்ளதால், தினகரனை சுயேச்சை வேட்பாளராகத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவசர வழக்காக எடுத்து, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை நாளை விசாரிக்க உள்ளது.

படம்: வி.ஶ்ரீநிவாசுலு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!