ரஜினியை இலங்கை செல்லவிடாமல் தடுத்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம் | Thirumavalavan clarifies why he objected to Rajnikanth visiting Sri Lanka.

வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (28/03/2017)

கடைசி தொடர்பு:14:52 (28/03/2017)

ரஜினியை இலங்கை செல்லவிடாமல் தடுத்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

rajini thiruam

இலங்கைக்கு எதிரான உலக நாடுகளின் கண்டனங்கள் திசை திரும்பாமல் இருப்பதற்காகவே, ரஜினி இலங்கை செல்லவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

லைகா நிறுவனம் சார்பில், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்தை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். ரஜினியும் இலங்கை செல்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஜினி இலங்கை செல்லக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, ரஜினியும் தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார். இந்தச் சம்பவம், அரசியல் அரங்கில் பல விவாதங்களை எழுப்பியது.

இந்நிலையில், ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என்பது குறித்துப் பேசிய திருமாவளவன், 'கிளிநொச்சி, வவுனியா, திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில், போரின்போது காணாமல்போனவர்களின் உறவினர்கள், முப்பது நாள்களுக்கும் மேலாக இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும், ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் 42 நாடுகள் இலங்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இதைத் திசை திருப்பவே, இலங்கை அரசு, ரஜினியை அங்கு அழைத்தது. சர்வதேச மன்றத்தில் இலங்கை தப்பிக்காமல் இருக்கவே, ரஜினி இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது' என்றார்.