விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது..! தமிழிசை அடடே பேட்டி

Tamilisai Soundrajan

'டெல்லியில் நடைபெறும் தமிழக விவசாயிகளின் போராட்டம், உள்நோக்கம் கொண்டது' என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வறட்சி நிவாரணம் வழங்குதல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜந்தர் மந்தரில் கடந்த 15 நாள்களாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தி.மு.க எம்பி., டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், 'டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம், உள்நோக்கம் கொண்டது. விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை தமிழக அரசு மறைக்கிறது. விவசாயக் கடன் ரத்து என்பது, மாநில அரசு சம்பந்தப்பட்ட பிரச்னை' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!