'அடக்கி வையுங்கள்'- ஹெச்.ராஜாவை எச்சரிக்கும் திருநாவுக்கரசர்

thirunavukkarasar

நிருபர் குறித்தும், சோனியாக காந்தி குறித்தும் அவதூறாக பேசிய பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு, தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது, நிருபரை தேசத் துரோகி என்று கூறினார். மேலும், சோனியா காந்தியை இத்தாலி நாட்டவர் என்றும் வெள்ளைக்காரி என்றும் குறிப்பிட்டார். இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாத காழ்ப்பு உணர்ச்சியில் ஹெச்.ராஜா இப்படி பேசித் திரிகிறார். விவசாயிகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் நிருபரை தேசத் துரோகி என்று கூறியுள்ளார்.

சோனியா காந்தியை விமர்சிக்க பா.ஜ.க.வில் யாருக்கும் அருகதை இல்லை. நீண்ட காலமாக ஹெச்.ராஜா காங்கிரஸ் தலைவர்களையும், பெரியார் போன்ற சமூக சீர்திருத்த தலைவர்களையும் நாக்கில் நரம்பில்லாமல் பேசி வருகிறார். அத்துமீறி பேசும் ஹெச்.ராஜாவை பா.ஜ.க தலைமை அடக்கி வைக்க வேண்டும். சோனியா காந்தி குறித்து பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு போராட்டம் நடத்தும் என்று எச்சரித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!