ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மத்திய படை கேட்கும் தீபா!

R.K.nagar by-election

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மத்திய பாதுகாப்பு படையினரை நிறுத்த வேண்டும் என்று எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில் துணைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பாண்டுரங்கன், துணைத்தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தி.மு.க, அ.இ.அ.தி.மு.க அம்மா, அ.இ.அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கின்றன. பாதுகாப்பு அதிகாரிகளும் அவர்களுக்கு துணையாக செயல்படுகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாண்டுரங்கன், 'பெரியக் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதற்கு தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் உடைந்தையாக உள்ளனர். எனவே, மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!