மதுசூதனனுக்காக வாக்குச் சேகரித்த கே.பி.முனுசாமி

ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, அந்தத் தொகுதியில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.

K.P.Munusamy

ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் மதுசூதனன், காலையிலேயே ஜல்லிக்கட்டுக் காளையுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மதுசூதனனுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவர், வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான புதுவண்ணாரப்பேட்டை, ஒத்தவாடை, அம்மணியம்மன்கோயில் தெரு, சேணியம்மன்கோயில் தெரு ஆகிய பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்தார். அப்போது பேசிய அவர், 'இருளில் கிடக்கும் இரட்டை இலையை, இந்த மின்விளக்கு மீட்டுக் கொடுக்கும். சூரியன் வராத இரவு வேளையிலும் இந்த விளக்கு வெளிச்சம் தரும்' என்று பேசி, வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

ந.பா.சேதுராமன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!