ப.சிதம்பரம், சீமானைச் சீண்டும் ஹெச்.ராஜா!

'முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிறைக்குச் செல்ல வாய்ப்புள்ளது' என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை 'தேசத் துரோதி' என்றும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை 'வெள்ளைக்காரி' என்றும் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.

h.raja

அவருடைய இந்தப் பேச்சுக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. தமிழ்நாடு முழுவதும் ஹெச்.ராஜாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், ஹெச்.ராஜா.

அவருடைய பதிவில், 'முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிறைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது. அவர், சிறையில் உள்ள வைகோவுக்குத் துணையாக இருப்பார்' என்று பதிவிட்டுள்ளார். அதேபோல, தேசத்துக்கு எதிராகப் பேசும் வழக்கில் வைகோவைத் தொடர்ந்து சீமானும் சிறைக்குச் செல்வார் என்பதைக் குறிக்கும் வகையிலும் பதிவிட்டுள்ளார் ஹெச்.ராஜா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!