பணப்பட்டுவாடா நடக்கிறது... சொல்கிறார், தமிழிசை

ஆர்.நகர் இடைத்தேர்தலில், பி.ஜே.பி சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். 

அவர் பேசுகையில், ''மோடியின் நல்லாட்சித் திட்டங்கள் தங்கு தடையின்றி தமிழக மக்களுக்குக் கிடைக்க வேண்டும். பி.ஜே.பி ஆளும் மாநிலங்கள் வளர்ச்சியில் முன்னேறிச் செல்கின்றன. ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், தமிழகம் முழுமையான வளர்ச்சியைப் பெறவில்லை. இன்னும் தமிழக மக்களுக்கு நிறையப் பயன்கள் கிடைக்கவேண்டியது இருக்கிறது.

ஆர்.கே. நகரில், கண்ணுக்குத் தெரியாமல் பணப்பட்டுவாடா நடக்கிறது. கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்து முடித்துவிட்டார்கள். தேர்தல் ஆணையம், தனது கடமைகளை உறுதியாகச் செய்ய வேண்டும். முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தேர்தலை நடத்திப் பயன் இல்லை. வேட்பாளர்கள் வரவேற்பையே பணம் கொடுத்துதான் செய்யவேண்டியுள்ளது" என்று வேதனையோடு தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!