மு.க.ஸ்டாலினை விளாசும் வைகைச்செல்வன்

'தி.மு.க-வை செயல்படாத தி.மு.க' என்று அழைக்கலாமா? என மு.க.ஸ்டாலினிடம் வைகைச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசு ஒரு செயல்படாத அரசாக இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் மீதுதான் ஆளும் அரசுக்கு அக்கறை இருக்கிறது. விவசாயிகள் பிரச்னை பற்றிக் கவனம் செலுத்துவதில்லை. இப்போது ஆட்சியில் இருக்கும் அரசை, சிறையில் இருக்கும் சசிகலாதான் இயக்குகிறார். இந்த அரசு ஒரு பினாமி அரசு என, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துவருகிறார்.

m.k.stalin, vaigaiselvan

இந்நிலையில், அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்த வைகைச்செல்வன், மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர், 'தி.மு.க-வில்... செயல்தலைவர், செயல்படாத தலைவர் என இரண்டு பேர் இருக்கின்றனர். அதனால், தி.மு.க-வை 'செயல்படாத தி.மு.க' என்று அழைக்கலாமா? அல்லது 'மருமகன் தி.மு.க' என்று அழைக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியை ஸ்டாலினிடமே விட்டுவிடுவதாகவும் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!