வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (05/04/2017)

கடைசி தொடர்பு:11:02 (05/04/2017)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: போலீஸார் மீது மு.க.ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு!

MK Stalin

'ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவது தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிடுவோம்' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கச் சென்ற தி.மு.க-வினர் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில், தி.மு.க மாணவரணியைச் சேர்ந்த பார்த்தசாரதி, ஷேக் முகமது உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த மூன்று பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. ஜனநாயகத்தைப் படுகொலைசெய்து, பணநாயகத்தின்மூலம் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

Stalin

ஆர்.கே.நகரில், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது. பணப்பட்டுவாடா விவகாரத்தில், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை காவல்துறையினர் தப்பிக்க விடுகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிடுவோம்' என்று தெரிவித்தார்.

படங்கள்: வி.ஶ்ரீநிவாசுலு