ஜி.கே வாசன் பன்னீர்செல்வத்தோடு ஏன் கூட்டணி போட்டார் தெரியுமா? #VikatanSatire

ஆர்.கே நகர்ல போட்டியிடவில்லை; யாருக்கும் ஆதரவு இல்லைனு சொல்லிட்டு இப்போ மதுசூதனனுக்கு ஆதரவுனு சொல்லி இருக்கிறார் ஜி.கே வாசன் . எதுக்காக இப்போ சேர்ந்திருக்காருனு ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிட்டு இருக்கிறாங்க. நாமும்  கொஞ்சம் குந்தாங்குலையா யோசிச்சுப் பார்த்ததில் கிடைச்சதுதான் இது.  

வாசன்

# உங்க கிருதாவும் என் கிருதாவும் ஒரே மாதிரி இருக்குதுல...

* பல பேருக்கு மதுசூதனனின் இரட்டை மின்கம்பம் சின்னம் இரட்டை இலை மாதிரியே தெரிஞ்சிட்டு இருக்கிற சூழல்ல இரட்டை மின்கம்பம் இவருக்கு தன்னுடைய சின்னமான தென்னை மரத்தை ஞாபகப்படுத்தியிருக்கலாம். அதுல நெகிழ்ந்து மகிழ்ந்துகூட தன்னுடைய ஆதரவைத் தெரிவிச்சுருக்கலாம்.

# ஃபிரண்டு ஃபீல் ஆயிட்டாப்ல...

* அ.தி.மு.க. டீமில் உள்கட்சிக்குள்ளயே சண்டை போட்டு மண்டை உடைச்சு தனித்தனியாக இயங்கிக்கிட்டு இருக்குற காட்சிகளைப் பார்க்கும்போது அவரது தந்தைக்கழகமும், தாய்க்கழகமுமான காங்கிரஸைப் பார்த்த மாதிரியே ஒரு ஃபீலிங் வந்து கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும் என தனது சப்போர்ட்டை பதிவு செய்திருக்கலாம்.

# அரசியல்ல இதெல்லாம்...

* நேத்து ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சுன்னு மாற்றிமாற்றிப் பேசினாதான் ஒரு சிறந்த அரசியல்வாதின்னு ஊருக்குள்ளே சில வரைமுறைகள் இருக்கு. அதை ஃபாலோ பண்ணக்கூட அப்போ போட்டியிடலைனு வீராப்பா சொல்லிட்டு இப்போ ஆதரவு தெரிவிக்கிறார்னுகூட இதை எடுத்துக்கலாம் மக்களே..

# நாங்களும் பரட்டைதான்...

* காங்கிரஸிற்கு எதிராகத்தான் த.மா.கா-வை தூசி தட்டி எழுப்பினார் ஜி.கே.வாசன். இப்போ அந்த காங்கிரஸ் ஆர்.கே. நகர்ல தி.மு.க-வுக்கு ஆதரவுன்னு சொல்லிடுச்சு. அப்படின்னா த.மா.கா. ஆப்போசிட் ரூட்டுலதானே போகணும். அதனாலகூட அவர் ஓ.பி.எஸ் டீமுக்கு வணக்கத்தைப் போட்டு வண்டியிலே ஏறியிருக்கலாம்.

# அதே டைலர் அதே வாடகை...

* அப்புறம் அ.தி.மு.க-காரங்களுக்கு மட்டும்தான் ஆன்மா வந்து பேசணுமா என்ன? ஜி.கே. வாசனும் காற்று வாங்கவோ, கடலை வாங்கவோ பீச் பக்கம் போயிருக்கலாம் அவரிடமும் ஆன்மா பேசிருக்கலாம்ல... ஆர்டர் போட்டிருக்கலாம்ல.

# இது தெரியாமப் போச்சே...

* ஹ்ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயத்தைச் சொல்ல மறந்தாச்சு. மதுசூதனனுக்கு ஆதரவு தெரிவிச்சுத்தான் ஜி.கே.வாசன் ஓ.பி.எஸ் டீம்ல இணைஞ்சிருக்கிறார்னு மட்டும் ஒருதலை பட்சமா யோசிக்கக் கூடாது. ஏற்கெனவே மக்கள் நலக் கூட்டணினு ஒரு கூட்டணியில இணைஞ்சு சல்லி சல்லியா நொறுக்கினது மாதிரி இந்த அணியையும் சீரும் சிறப்புமாக செஞ்சு அனுப்பறதுக்காகக்கூட இணைஞ்சிருக்கலாம். யாரும் அனுப்பியும் வச்சிருக்கலாம் யாருக்குத் தெரியும். ஆங்ங்ங்..

- ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!