வருமான வரித்துறை சோதனை - சி.பி.ஐ விசாரணை கேட்கும் ஸ்டாலின்

வருமான வரித்துறை சோதனை குறித்து, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ''அ.தி.மு.க ஆட்சியில் இப்படி வியூகம் வகுத்து வாக்குக்குப் பணம் கொடுப்பது அவர்களுக்கு கைவந்த கலை. அ.தி.மு.க-வின் இடைத்தேர்தல் வரலாறுகள் அனைத்துமே பணப்பட்டுவாடா பார்முலாக்கள் அடங்கிய கேடுகெட்ட வரலாறுதான்.  வாக்காளர்களின் கண்ணியத்தை சூறையாடி வெற்றிபெறவே ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் செயல்பட்டார்கள் என்பதை தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்களும், தேர்தல் அதிகாரிகளும் நன்கு உணர்வார்கள்.

 

ஸ்டாலின்

தேர்தல் ஜனநாயகத்தை 'பண நாயகமாக' மாற்றி, நேர்மையான அரசு நிர்வாகத்தை 'ஊழல் சாக்கடையாக' திசைதிருப்பி, நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரையும் வசூலுக்கு உட்படுத்தி, அரசு கஜானாவை எப்படியெல்லாம் காலி செய்திருக்கிறார்கள் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இடைத்தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அமைச்சர்களையும் உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும். சி.பி.ஐ வழக்குப் பதிவுசெய்து, அந்த அமைச்சர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதியிழப்பு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை நடைபெற்ற நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!