ஊழல் புரிந்த தி.மு.க வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் - சுப்பிரமணிய சுவாமி

'காங்கிரசுடன் சேர்ந்து தேசிய அளவில் தி.மு.க ஊழல் செய்துள்ளது. அந்தக் கட்சியின் வேட்பாளரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார், பா.ஜ.க வின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி. அரசியல் தொடர்பாகவும், தமிழர்கள் பற்றியும் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார் இவர்.

subramanian swamy

இன்று கோவை விமான நிலையத்தில் சுப்ரமணிய சுவாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. தென்னிந்தியாவில் நிலவும் கால நிலையால் தான் மக்களின் நிறம் மாறுபட்டுள்ளது. தருண் விஜய் நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஊழல் செய்கின்றன. இருந்தாலும் காங்கிரசுடன் சேர்ந்து தேசிய அளவில் தி.மு.க ஊழல் செய்துள்ளது. எனவே, அக்கட்சியின் வேட்பாளரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்' என்றார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!