வெளியிடப்பட்ட நேரம்: 09:34 (11/04/2017)

கடைசி தொடர்பு:10:01 (11/04/2017)

விஜயபாஸ்கருக்கு அடுத்த நெருக்கடி! கல்குவாரியில் மத்திய பொதுப்பணித்துறை அதிரடி ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசலில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல் குவாரியில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர்.

விஜயபாஸ்கரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சரத்குமாரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நடந்த அதே நேரத்தில் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை நடத்தினர். ஏற்கெனவே புதுக்கோட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அவரின் உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோர் தங்கியிருந்த இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தற்போது விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல் குவாரியிலும் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களில் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு அதிகாரிகளின் தொடர் ஆய்வு நடவடிக்கைகளை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடிகளை உருவாக்கி வருகிறது.