வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (11/04/2017)

கடைசி தொடர்பு:11:21 (11/04/2017)

மாஃபா பாண்டியராஜன் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்ஜாமீன் கோரி தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதா இறந்தபோது பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் தேசியக் கொடி போர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அவர் இறந்த நேரத்தில் அந்த புகைப்படம் அதிகமாக நாளிதழ்கள், வார இதழ்களில் வெளியானது.

mafoi pandiya rajan

அந்த புகைப்படத்தில் இருந்தது போல ஜெயலலிதா இறந்த உடலின் மீது தேசியக் கொடி போர்த்தி இருப்பது போல உருவம் செய்து ஓ.பி.எஸ் அணியினர் ஆர்.கே.நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அந்த பிரசாரத்தை மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்துப் பேசினார். பேச்சாளர் அழகுதமிழ்ச்செல்வியும் உடனிருந்தார். தேசியக் கொடியை அவமதித்ததாக அவர்கள் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையினரின் கைது நடவடிக்கையை தவிர்க்க மாஃபா பாண்டியராஜன் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.