விஜயபாஸ்கர் மீது சிபிஐ விசாரணை கோரி ஓ.பி.எஸ். ஆதரவு எம்பி மனு!

'சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம், ஓ.பி.எஸ் ஆதரவு எம்பி சுந்தரம், கோரிக்கை மனு அளித்தார்.

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சோதனை நடத்தினர். சோதனையின்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவது குறித்த விவரங்கள்கொண்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

Vijayabaskar

மேலும், வருமான வரித்துறையினர் நேற்று அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்தது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி., சுந்தரம், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில், விஜயபாஸ்கர் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!