Published:Updated:

தமிழகத்தில் அரிசி விலை கடும் உயர்வு!

விகடன் விமர்சனக்குழு
தமிழகத்தில் அரிசி விலை கடும் உயர்வு!
தமிழகத்தில் அரிசி விலை கடும் உயர்வு!
தமிழகத்தில் அரிசி விலை கடும் உயர்வு!

சென்னை:  தமிழகத்தில் பச்சரிசி, புழுங்கல் அரிவி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அறுவடை தாமதம் மற்றும் மற்ற மாநிலத்திலிருந்து இறக்குமதியான அரிசி அளவு கடுமையாக குறைந்தது போன்ற காரணங்களால், தமிழகத்தில் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது என  தமிழ்நாடு சில்லரை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி. சொருபன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர்  கூறியதாவது:-

ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து, தமிழகத்திற்கு தினசரி 500 லாரிகளில் இறக்குமதியான அரிசி தற்போது 25 லாரியாக குறைந்துள்ளது.

அதுமட்டுமின்றி தமிழகம், அந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மழை மற்றும் மின்சார தட்டுப்பாடு காரணமாக நெல் அறுவடை 2  மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து,  குஜ்ராத் எடுத்து செல்லப்படும் அரிசிகள், மறைமுகமாக ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு ஒரு கிலோ அரிசி 80 முதல் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மத்திய அரசு பாஸ்மதி அரிசிக்கு மட்டுமே ஏற்றுமதி அனுமதி வழங்கியுள்ள நிலையில், சில மத்திய, மாநில அரசியல்வாதிகள் பாஸ்மதி அரிசி என்ற பெயரில் புழுங்கல் மற்றும் பச்சரிசிகளை பல டன்களாக ஏற்றுமதி செய்வதால் அரிசி விலை தமிழகத்தில் கடுமையாக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு சில்லரை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி. சொருபன் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட பொன்னி 25 கிலோ தற்போது 525 முதல் 625 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

மேலும் சில அரிசி விலை நிலவரங்கள்:

லோக்கல் பொன்னி 700 - 750

பொன்னி பழையது 750 - 850

சாதா பொன்னி 800 - 850

கர்நாடகா பொன்னி 850 - 900

நெல்லை பொன்னி 900 950

பொஙல் பச்சரிசி 50 கிலோ 980 1050

புழுங்கல் அரிசி 75 கிலோ எ.டி.டி. 45  1500 முதல் 1600

இட்லி அரிசி 50 கிலோ 1300 - 1500

பழைய இட்லி அரிசி 1700 - 1800

நெல்லை பொன்னி 1550 - 1700

பாசுமதி 1 கிலோ - 70 -80