ஹேமமாலினி மீது சுயேட்சை எம்.எல்.ஏ சர்ச்சைக்குரிய கருத்து..!

நடிகையும் மக்களவை உறுப்பினருமான ஹேமமாலினி மீது சர்ச்சைக்குரிய கருத்து கூறியுள்ளார் மஹாராஷ்டிரா சுயேட்சை எம்.எல்.ஏ பச்சு கடு. ஹேமமாலினி தினமும் குடிக்கிறார், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லையே என அவர் கூறியுள்ளார்.

விவசாயிகள் தற்கொலை குறித்த விவாதத்தின் போது அதிகமான மது பழக்கத்தால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில், மகாராஷ்டிரா மாநிலம் அசல்பூர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ பச்சு கடு நடிகை ஹேமமாலினியை தாக்கியுள்ளார். மது பழக்கத்தினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில்லை என கூறியுள்ள அவர் ,' ஹேமமாலினியும் தான் தினமும் அளவுக்கதிகமாக குடிக்கிறார். அதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டாரா.?' என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது மகன் திருமணத்திற்கு 4 கோடி செலவு செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.இதையடுத்து எம்.எல்.ஏ வின் கருத்துக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!