Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தலைவர்கள் பிறந்த நாள்களில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது - ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாளுக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கு இனி விடுமுறை கிடையாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 


யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரேதச மாநில முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள் நடைமுறைகள் தொடர்பாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். யோகா மற்றும் தற்காப்பு கலைகளை பள்ளிகளில் கட்டாயப்படுத்தினார். நேற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடை ரத்து செய்து அறிவித்தார். தற்போது தலைவர்களின் பிறந்த நாள்களுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவித்துள்ளார்.

அம்பேத்கரின் 126-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பிறகு பேசிய அவர்,'தலைவர்களின் பிறந்த நாள் அன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது. அன்றைய தினங்களில் பள்ளிகள், வழக்கம் போல இயங்கும். அன்று தலைவர்களைப் பற்றி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும்' என்றார். மேலும் அம்பேத்கர் பெயரில் ஆப் வெளியிட்டதற்கு மோடிக்கு நன்றி' தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement