அரசு விழாவில் அதிரவைத்த அமைச்சர் பேச்சு!

ராமநாதபுரத்தில் நடந்த அரசு விழாவில் அதிகாரிகளை, அமைச்சர் மணிகண்டன் குற்றம்சாட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

manikandan


ராமநாதபுரம் தொகுதிக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த மணிகண்டன் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான இவர், அவருடைய தொகுதி மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், 'என் வீடு இருக்கும் வார்டு மிகவும் மோசமாக உள்ளது. சாலை வசதிகள் மட்டமாக உள்ளன. நகராட்சி அதிகாரிகள் அதுகுறித்து எந்த அக்கறையும் கொள்ளவில்லை. சாலையில் சென்று வருவதற்கே சிரமமாக உள்ளது. நகராட்சி அதிகாரிகள் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டு நிலைமை மோசமாக உள்ளது' என்று பேசினார்.

ஆளும்கட்சியைர் சேர்ந்தவர் தான் ராமநாதபுரம் நகராட்சித் தலைவராக உள்ளார். சில நாள்களுக்கு முன்பு திருப்பூர் தெற்கு தொகுதியைச் சேர்ந்த ஆளும்கட்சி எம்எல்ஏ குணசேகரன், அரசு அதிகாரிகளைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது, அமைச்சர் ஒருவர், அதிகாரிகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து பேசியிருப்பது ஆளும்தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!