அதிமுக அமைச்சர்களைத் தாக்கும் சசிகலா!

வருமானவரித்துறை சோதனையின்போது அதிமுக அமைச்சர்கள் நடந்துகொண்ட விதம் தவறு என விமர்சித்துள்ளார் எம்பி சசிகலா புஷ்பா. பெண் அதிகாரியை மிரட்டியதாக அமைச்சர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அண்மையில் வருமானவரித்துறையினர், அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது அதிமுக அமைச்சர்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என புகார் கூறப்பட்டது. சோதனையை தடுக்கும் விதமாக செயல்பட்டதாக அமைச்சர் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் மீதும் வருமானவரித்துறையினர் புகார் அளித்தனர். இந்நிலையில், அதிமுகவினரின் செயல்கள் குறித்து பேசியுள்ளார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி சசிகலா புஷ்பா. இதுகுறித்து அவர் கூறுகையில், 'வருமானவரித்துறையின் சோதனையின்போது நடைபெற்ற செயல்களுக்கு அமைச்சர்களே முழுக் காரணம். அதிகாரத்தை அவர்கள் பொறுப்புடன் கையாளாமல் அதை துஷ்ப்பிரயோகம் செய்வது முற்றிலும் தவறு' என விமர்சித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!