Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏப்ரல் 25-ல் பொது வேலை நிறுத்தம் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

ஏப்ரல் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கட்சித் தலைவர்களும் பிரதமரை சந்தித்து கோரிக்கை அளிக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

all party meet


விவசாயிகள் பிரச்னை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யின் மாநில பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகள் பிரச்னை தொடர்பாகவும் தமிழ்நாட்டின் பிரச்னை தொடர்பாகவும் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சட்டப்பேரவையை கூட்டி விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், அனைத்துக் கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்க வேண்டும், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், குடிநீர் பிரச்னைக்கு போர்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும், நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், அண்டை மாநிலங்கள் தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும், ஏப்ரல் 25-ம் தேதி பொதுவேலை நிறுத்தம் நடைபெறும் என்று 15 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். 

படம் : சோ.பாலசுப்ரமணியம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement