பேசுங்கள் பன்னீர்செல்வம்! அழைக்கும் அமைச்சர்கள்

இன்று காலை டி.டி.வி.தினகரனுடன் ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

senkottaiyan

அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'பிளவுபட்டுள்ள அணிகளை மீண்டும் இணைப்பதுகுறித்து கலந்தாலோசித்தோம். இரு அணிகளும் மீண்டும் ஒன்றாக இணைந்து அ.தி.மு.க-வாகச் செயலாற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. பிரிந்து சென்ற மாற்று அணியை இணைப்பதுகுறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமியும் கூறியுள்ளார்.

ஓ.பி.எஸ் அணி வந்தால் இணையலாம் என தினகரன் ஏற்கெனவே கூறினார். பன்னீர் செல்வம் கூறியுள்ள கருத்து பற்றியும் தினகரனிடம் கலந்து பேசினோம். இரட்டை இலைச் சின்னத்தை மீட்க வேண்டும் என எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் பெரிதும் விரும்புகின்றனர். ஓ.பி.எஸ் அணியுடன் பேச, குழு அமைக்க முயற்சிசெய்துவருகிறோம்' என்றார்.

அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், "இரட்டை இலை மீட்பு, கட்சியின் நலனுக்காக ஒன்றிணைய வேண்டும். பேச்சுவார்த்தைக் குழுவுடன் பன்னீர்செல்வம் பேசினால்தான், மற்ற முடிவுகளை எடுக்க முடியும். பிரிந்துள்ள அணிகள் மீண்டும் இணைய வேண்டும்" என்று கூறினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!